பொதுவான மற்றும் ரிடர்ன் மற்றும் எக்ஸ்சேன்ச் கொள்கை

 

Royal Enfield ஆன்லைன் ஸ்டோரில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் தடையின்றி இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறது. நாங்கள், எங்களது பொருட்களை டெலிவரி செய்வதில் சிறந்த கவனம் செலுத்துகிறோம் மற்றும் மிக உயர்ந்த தரத்தையும் கடைப்பிடிக்கிறோம்.

தள்ளுபடியில் வழங்கப்பட்ட பொருட்களைத் தவிர, பொருள், கிடைக்கும் அளவு ஆகியவற்றைப் பொருத்து பொருள் கிடைத்த 15 நாட்களுக்குள் ரிட்டன் செய்வது என்பது Royal Enfield ஆடைகள் பிரிவில், எந்த கேள்விகளும் கேட்காமல் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ஜ் கொள்கை, துவக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை , தயாரிப்பு தவறாக டெலிவரி செய்யப்பட்டாலோ, ஆர்டர் உறுதிப்படுத்தியதோடு பொருந்தாமல் இருந்தாலோ அல்லது தரத்திலோ/உற்பத்தியிலோ உண்மையாகவே குறைபாடு இருந்தாலோ அதற்கு பணத்தை முழுவதுமாக ரீஃபண்ட் செய்யப்படும் அல்லது ஆர்டர் மீண்டும் நிறைவேற்றித் தரப்படும்.

store.royalenfield.com என்ற வலைத்தளத்தில் தயாரிப்புகளைப் பற்றிய விவர பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின் படி, தயாரிப்பு சேதமடைந்திருந்தாலோ, பாகங்கள் அல்லது உபகரணங்கள் இல்லாமல் இருந்தாலோ, குறைபாடு அல்லது மாறுபட்டு இருந்தாலோ , அத்தகைய தயாரிப்புகள் ரிட்டன் செய்வதற்கான தகுதியைப் பெறுகின்றன.

பின்வருமாறு இருந்தால் மட்டுமே ரிட்டன் செயலாக்கம் செய்யப்படும்:

(i) வாடிக்கையாளர் வசம் இருக்கும்போது தயாரிப்பு சேதமடையவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது;

(ii) தயாரிப்பு வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட ஒன்றிலிருந்து வேறுபட்டதல்ல;

(iii) தயாரிப்பு அசல் நிலையில் (பிராண்டின்/உற்பத்தியாளரின் பெட்டி, சேதமாகாத MRP டேக், பயனர் கையேடு, உத்தரவாத அட்டை மற்றும் அதிலுள்ள அனைத்து உபகரணங்களுடன்) ரிட்டன் செய்யப்பட்டது.

(iv) தயாரிப்பு டெலிவரி செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ரிட்டன் தொடங்கப்பட்டது.

(v) தயாரிப்பு விவரப் பக்கத்தில் "திரும்பப் பெற முடியாதது" எனக் குறிக்கப்பட்ட அல்லது தள்ளுபடியில் வாங்கிய தயாரிப்புகளைத் திரும்பப் பெற முடியாது.

(vi) அளவு மாற்றிக்கொடுத்தல் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் மாற்றியனுப்புதலுக்கு ஷிப்பிங் கட்டணங்கள் இல்லை.

(vii) அளவை சரிபார்க்க அனைத்து காலணிகளும் தரைவிரிப்பு கொண்ட மேற்பரப்பில் முயற்சிக்கப்பட வேண்டும்.

தயாரிப்பு வண்ணங்கள்: எங்கள் தயாரிப்புகளின் வண்ணங்களை முடிந்தவரை துல்லியமாகக் காட்ட அனைத்து முயற்சியும் செய்யப்படுகிறது. இருப்பினும், வெவ்வேறு டிஜிட்டல் திரைகளில் பார்ப்பதனால், இறுதியான படம் மாறுபடலாம்.

ஒரு பொருளை மாற்றிக்கொள்ள அல்லது போக்குவரத்தில் சேதம் ஏற்பட்டிருந்தால் அதைப் புகாரளிக்க, டெலிவரி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் support@royalenfield.com இல் எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும். ஆர்டர் எண், பரிவர்த்தனை தேதி, டெலிவரி முகவரி மற்றும் தவறாக வழங்கப்பட்ட அல்லது குறைபாடுள்ள பொருளின் படத்தைப் பகிரவும்.

மாற்றிக்கொடுத்தல், பணத்தைத் திருப்பிக் கொடுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் திரும்ப எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை ஏற்பதற்கும்/நிராகரிப்பதற்குமான உரிமையை Royal Enfield கொண்டுள்ளது. ஒவ்வொரு கோரிக்கையும் அந்தந்த விஷயத்தின் அடிப்படையில் கையாளப்படுகிறது, மேலும் சரியான தீர்வுக்காக வாடிக்கையாளர் எங்கள் குழுவைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: டெலிவரி செய்யப்பட்ட தயாரிப்பில் சேதம் அல்லது உற்பத்தியில் குறைபாடுகள் ஆகியவற்றைத் தவிர, தள்ளுபடி கொண்ட தயாரிப்புகளை மாற்றவோ அல்லது ரிட்டன் செய்யவோ இயலாது.கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களுக்கு ஸ்டோர் கிரெடிட் ஆக மட்டுமே பணம் திருப்பித் தரப்படும்

பொறுப்புத் துறப்பு: அனைத்து கொள்கைகளும் முன் அறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டது. முரண்பாடுகள் ஏதேனும் இருப்பின், Royal Enfield இன் முடிவே இறுதியானதும் முடிவானதாதும் ஆகும்.

ஆன்லைனில் வாங்கும் தயாரிப்புகளை Royal Enfield ஸ்டோர்/Royal Enfield டீலர்ஷிப்பில் மாற்ற முடியாது

சேதமடைந்த/குறைபாடுள்ள நிலையில் ரிட்டன் செய்ய முடியாத தயாரிப்பை நீங்கள் பெற்றிருந்தால், தயாரிப்பு டெலிவரி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் எங்களை தொடர்புகொள்ளலாம்.

 

RE கியர் மற்றும் அப்பாரல் உத்தரவாதக் கொள்கை

Royal Enfield தனது வாடிக்கையாளர்களுக்கு பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கும் ஒவ்வொரு தயாரிப்புக்கும் உத்தரவாதத்தை வழங்க உறுதி பூண்டுள்ளது. உத்தரவாதக் கொள்கையானது உற்பத்தி குறைபாடுகளை மட்டுமே உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு உரிமைகோரலையும் தனித்தனியாக ஆராய்ந்து, வாடிக்கையாளருடன் கலந்து பேசுவதன் மூலம் கோரிக்கையைத் தீர்ப்பது, கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் தயாரிப்பை ஒரே மாதிரியான அல்லது ஒத்த தயாரிப்புடன் மாற்றிக்கொடுப்பதே எங்கள் நோக்கமாகும்.

 

வகை வாரியாக உத்தரவாத காலம்:

டீலர்களுக்கு: ஏதேனும் உரிமைகோரல்களைப் பெற, பொருட்களைப் பெற்றதிலிருந்து 7 வேலை நாட்கள்.

இறுதிப் பயனர்களுக்கு: *ரைடிங் கியர் - சில்லறை விலைப்பட்டியல் தேதியிலிருந்து 6 மாதங்கள்/ *லைஃப்ஸ்டைல் உடைகள் மற்றும் துணைப்பொருட்கள் - சில்லறை விலைப்பட்டியல் தேதியிலிருந்து 3 மாதங்கள்.

 

உத்தரவாதக் கொள்கை விலக்குகள்-

Royal Enfield உத்தரவாதத்தைப் செயல்படுத்துவதற்கும் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதே அல்லது ஒத்த மதிப்புள்ள தயாரிப்புகளை மாற்றிக்கொடுப்பதை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளது:

  1. எந்தவொரு உத்தரவாதக் கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் இருந்து பெறப்பட்ட கொள்முதல் விலைப்பட்டியலுடன் இருக்க வேண்டும்.

  2. விபத்து, முறையற்ற பராமரிப்பு, அலட்சியம், சாதாரண தேய்மானம், அல்லது காலப்போக்கில் ஏற்படும் வண்ணங்கள் மற்றும் பொருட்களின் இயற்கையான சேதம், நேரம், வெளிப்பாடு அல்லது விரிவான பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் சேதத்தை உத்தரவாதம் உள்ளடக்காது.

  3. தயாரிப்பு மாற்றப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றியமைகப்பட்டிருந்தாலோ உத்தரவாதம் பொருந்தாது.

  4. பணம் திருப்பிக் கொடுக்க இயலாது

  5. எந்தவொரு தற்செயலான அல்லது அதன் விளைவாக ஏற்படும் சேதங்களுக்கான அனைத்து உரிமைகோரல்களையும் இந்த உத்தரவாதம் விலக்குகிறது.

மேற்கூறிய நிபந்தனைகளில் ஏதேனும் பூர்த்தி செய்யப்படாவிட்டால் உத்தரவாதக் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

உத்தரவாதக் கோரிக்கையை எவ்வாறு செயலாக்குவது:

இறுதிப் பயனர், தயாரிப்பு வாங்கப்பட்ட டீலர்களிடம் உத்தரவாதக் கோரிக்கையை எழுப்ப வேண்டும் .

இறுதி-பயனர் மற்றும் டீலர்கள் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து warranty@royalenfield.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிமைக்கோரல் கோரிக்கையை எழுப்பலாம்.

 

Royal Enfield உத்தரவாதக் குழு 3 வேலை நாட்களுக்குள் உரிமைகோரலை ஏற்றுக்கொள்ள / நிராகரிக்க முடிவு செய்யும் என்று உறுதியளிக்கிறது.

உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், டீலர்/இறுதிப் பயனர் அந்தந்த உரிமைகோரல் எண்ணுக்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவார்.

அதே தயாரிப்பு இருக்கும் பட்சத்தில், அது விரைவில் டீலர் / இறுதிப் பயனருக்கு அனுப்பப்படும் மற்றும் மாற்றித்தரப்பட்ட தயாரிப்பு கிடைத்தவுடன் டீலர் உடனடியாக இறுதிப் பயனருக்குத் தெரிவிக்க வேண்டும்.

 

ஒரு தயாரிப்பு கிடைக்காத பட்சத்தில், டீலர்/இறுதிப் பயனருக்குத் விருப்பத்திற்கேற்ற அதே போன்ற தயாரிப்பு அனுப்பப்படும்.

விலையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், பொருளின் தொகையின் மதிப்பில் இறுதிப் பயனர் கிரெடிட் நோட்டைப் பெறுவார் / அதை அவர்கள் தங்கள் அடுத்த ஆர்டருக்கு பயன்படுத்தலாம்.

 

அதே/அது போன்ற தயாரிப்பு கிடைக்காத பட்சத்தில், டீலர்/பொருளின் தொகையின் மதிப்பில் இறுதிப் பயனர் கிரெடிட் நோட்டைப் பெறுவார், அதை அவர்கள் அடுத்த ஆர்டரில் பயன்படுத்தலாம்.

 

உத்தரவாதக் கோரிக்கைகளின் எந்தவொரு சர்ச்சையும் குர்கான், ஹரியானா, இந்தியாவின் நீதித்துறை அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

*ரைடிங் கியர் - ஹெல்மெட்கள், கண்ணாடி, சவாரி ஜாக்கெட்டுகள், டெனிம் / டெனிம் அல்லாத டிரவுசர்கள், கிளவுஸ்கள், ஆர்மர்கள், ரைடிங் ஷூக்கள், ரெயின் கியர், விண்ட்சீட்டர் & பூட் கவர்கள்..

*லைஃப்ஸ்டைல்அப்பாரல் - டி-ஷர்ட், ஷர்ட்கள், லைஃப்ஸ்டைல் ஜாக்கெட்டுகள், பாட்டம் வேர் மற்றும் பூட்ஸ் மற்றும் ஸ்னீக்கர்கள்.

*லைஃப்ஸ்டைல் துணைப்பொருட்கள்: அணியக்கூடியவை, ஹெட்கியர், கண்ணாடி, லக்கேஜ் மற்றும் சேகரிப்புகள்.

Creating an account has many benefits: check out faster, keep more than one address, track orders and more.

சுய விபரம்
அல்லது