Royal Enfield,  Better Cotton-இல் ஓர் பெருமை மிகு உறுப்பினராக உள்ளது

Royal Enfield, Better Cotton-இல் ஓர் பெருமை மிகு உறுப்பினராக உள்ளது

 

 

உலகின் மிக முக்கியமான புதுப்பிக்கப்படக் கூடிய இயற்கை வளங்களில் பருத்தி ஒன்றாகும் அதன் வளர்ச்சியையும், உற்பத்தியையும் பாதுகாப்பது அவசியம் உலகளவில் பருத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காகBetter Cotton -இல் உறுப்பினராக இருப்பதை அறிவிப்பதில் Royal Enfield பெருமிதம் கொள்கிறது

Better Cotton என்றால் என்ன?

Better Cotton என்பது உலகின் மிகப் பெரிய பருத்தி நிலைத்தன்மை திட்டமாகும் மண் ஆரோக்கியம், பண்ணை நடைமுறைகள், மகசூல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு திட்டங்களில் Better Cotton, அரசு அமைப்புகள், வேளாண் பங்குதாரர்கள் மற்றும் வேளாண் சமூகங்களுடன் இணைந்து செயல்படுகிறது

 

Better Cotton, Mass Balance என்ற அமைப்பின் சோர்ஸ் செய்யப்படுகிறது, அதன் இறுதித் தயாரிப்புகளை நேரடியாகக் கண்டறிய முடியாது இருப்பினும், நமக்கு 'சோர்ஸ்' செய்யும் சமமான தொகுதிகளில் இருந்து, Better Cotton விவசாயிகள், Better Cotton-க்கான தேவையால் பயனடைகிறார்கள் விவரங்களுக்கு bettercotton.org/massbalance- ஐப்பார்க்கவும்.

 

Royal Enfield ஏன் Better Cotton-இல் ஓர் உறுப்பினராக உள்ளது

சிறந்த பருத்தித் தொழிலுக்கான Better Cotton-இன் அர்ப்பணிப்பு, Royal Enfield-இன் தொலைநோக்கு நீடிப்புத்தன்மை, பொறுப்பு மற்றும் ‘ஒவ்வொரு இடத்தையும் இன்னும் சிறப்பானதாக விட்டுச் செல்லுங்கள்’ என்ற தத்துவத்தில் எதிரொலிக்கிறது பொறுப்பான கொள்முதல் செய்தல், பேக்கேஜிங், சக்தி-சார்பற்ற உற்பத்தி போன்ற எங்கள் பசுமை வணிக முன்முயற்சிகளுக்கு ஏற்ப இது உள்ளது

 

இந்த முன் முயற்சியில் RoyalEnfield-இன் உறுதிப்பாடு என்ன?

உலகளவில் பருத்தி விவசாயத்தை மேம்படுத்த Royal Enfield இப்போது Better Cotton-இல் உறுப்பினராக உள்ளது தற்போது எங்களின் பருத்தித் தேவைகளில் 10% Better Cotton மூலம் பெறுகிறோம், இதை 2021ஆம் ஆண்டின் இறுதியில் 40% ஆகவும், 2022ஆம் ஆண்டில் 80% ஆகவும், 2023ஆம் ஆண்டில் 100% ஆகவும் அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம்

 

ஆர்கானிக் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தியிலிருந்து Better Cotton எவ்வாறு வேறுபடுகிறது

ஆர்கானிக் பருத்தி என்பது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மண் நல்வாழ்வைப் பாதுகாத்து மேம்படுத்தும் செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பருத்தி இழையாகும். மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி என்பது பயன்படுத்தப்பட்ட பருத்தித் துணிகளில்

இருந்து தயாரிக்கப்படும் பருத்தி இழை ஆகும்

ஒரு நிறுவனமாக Better Cotton, பருத்தி உற்பத்திக்கான நல்ல சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளில் கவனம் செலுத்துகிறது, மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பருத்தி விவசாயிகளின் நலன், மேம்பாடு மற்றும் அவர்களுக்கு சக்தியளித்தல் ஆகியவற்றை நோக்கிச் செயல்படுகிறது

 

Better Cotton, பருத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

பருத்தி சமூகங்கள் செழித்துத் தொடர்ந்து வாழ உதவும் அதே வேளையில் Better Cotton சுற்றுச் சூழலைப் பாதுகாத்து அதை மீட்டெடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது

Better Cotton இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

Royal Enfield-இல் இருந்து பருத்தி தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பொறுப்பான பருத்தி உற்பத்தியை Better Cotton மூலம் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்

 

 

← Previous Post


உங்கள் மலை சவாரிகளை சிறந்த முறையில் செய்யுங்கள்

Next Post →


உத்தராகண்ட் - ஆன் அட்வென்ச்சர்

Creating an account has many benefits: check out faster, keep more than one address, track orders and more.

சுய விபரம்
அல்லது