Design Philosophy
எங்கள் நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றை ஓட்டும் நபர்களுடன், புதிய மற்றும் செழுமையான உணர்ச்சி வெளிப்பாட்டினை கண்டுபிடித்துள்ளோம். Royal Enfield அப்பேரல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் மீதான தங்கள் காதலை அதிகரிக்கும் அதே வேளையில், ரைடர்ஸ் அவர்களின் உண்மையான சுய அடையாளத்தைக் கண்டறிய உதவுவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்கிறது.
ஸ்பிரிங் சம்மர்'20 கலெக்ஷன் ஒவ்வொரு ரைடரின் "லீவ் ஹோம்" என்ற ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. சாலையில் இருக்க வேண்டும், தங்கள் இயந்திரத்துடன் ஒன்றிணைந்து இருக்க வேண்டும், தன் நிலை இழந்து குதூகலிக்க வேண்டும் என்ற உந்துதலுடன்.
மலைகளின் அழைப்பு முதல் உப்பு நிறைந்த கடல் காற்று மீதான ஆழ்ந்த ஏக்கம் வரை, இந்த கலெக்ஷன் ஒவ்வொரு சவாரிக்கும் புதிய அவதாரத்துடன் சவாரி செய்வதற்கான காரணத்தை பிரதிபலிக்கிறது.
கலெக்ஷனானது நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு கியர் மற்றும் லெய்ட்-பேக், பிரகாசமான வாழ்க்கைக்கான உடைகள் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளது. எங்களின் முந்தைய கலெக்ஷன்களைப் போலவே, இதுவும் Royal Enfield பாரம்பரியத்தின் சிறு மைல்கற்கள், குறிப்புகள் மற்றும் சின்னங்களைப் பிரதிபலிக்கும் நிலைகளைக் கொண்டுள்ளது.
ஸ்பிரிங் சம்மர் '20 கலெக்ஷன் மூலம், வீட்டிலிருந்து வெளிவர ஆர்வமுள்ளவர்களுக்கான பாதுகாப்பான, வசதியான மற்றும் புதிய உடைகளை கொண்ட மோட்டார்சைக்கிள் வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளோம்.
பாதுகாப்பு கியர்
சவாரி காலத்தின் தொடக்கத்தை வரவேற்க, சமீபத்திய கட்டுமான ஸ்டைலில், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவனமாக வடிவமைக்கப்பட்ட கியர் இந்த வரிசையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சவாரியையும் மறக்க முடியாததாக மாற்ற, கியர் ஒவ்வொன்றும் மேம்பட்ட வசதி மற்றும் பாதுகாப்புடன் வருகிறது. ஒவ்வொரு நிலப்பரப்பையும் ஆராய்ந்து, பல லேயர் ஜாக்கெட்டுகள், டிரவுசர்கள், ஹெல்மெட்கள், கிளவுஸ்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு வரைபடத்தைத் தாண்டி சவாரி செய்யத் துணியுங்கள்.
மேடு லைக் எ கன்
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக, சீருடை அணிந்த ஆண்களுக்கு ராயல் என்ஃபீல்டு நம்பகமான துணையாக இருந்து வருகிறது. நெறிமுறைகளுக்கு உண்மையாக இருப்பதால், இந்த வரிசையானது அது பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களைப் போலவே தனித்து நிற்கிறது.
டெஸ்டினேஷன் அஞ்சான்
எந்த இரு ரைடர்களும் ஒன்று போல இருப்பதில்லை, ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் மீதான அவர்களின் காதல் புனிதமானது மற்றும் ஆர்வம் தூய்மையானது. இன்றைய ரைடர்களின் இந்தப் பகிரப்பட்ட உணர்வைப் படம்பிடித்து, இந்த உடைகள் வரம்பு அவர்களின் நகைச்சுவையான ஆளுமைகளையும் அவர்களின் சமகால சவாரி முறையையும் பிரதிபலிக்கிறது. நவீன கால சவாரியை விரும்பும் நவீன-கால ரைடர்களுக்காக கண்ணைக் கவரும் கிராஃபிக்ஸ் மற்றும் பிரகாசமான வண்ணங்கள் முதல் மொழிகள் வரை, இந்த தயாரிப்புகளானது ஒரு சான்றாகும்.
காலத்தைவிட வலுவானது
Royal Enfield இன் மரபு என்பது பலரால் சவாரி செய்யப்பட்ட ஒரு சாலையாகும். எங்கள் வழியில் நாங்கள் மைல்கற்களைக் கடந்து, காலத்தின் சோதனையாக நிற்கும் கதைகளை உருவாக்கியுள்ளோம். இக்கதைகளை உள்ளடக்கி, காலத்தை விட வலுவானது என்ற வரிசை பெருமையுடன் நீடித்த மற்றும் முதிர்ந்த பாரம்பரியத்தை ஒரு புதிய ஸ்டைலில் எடுத்துக்காட்டுகிறது.