Royalenfield Store Page loader Gif
CE சர்ட்டிஃபைய்டு ஜாக்கெட்ஸ் Vs CE சர்ட்டிபைய்டு ஆர்மர்

CE சர்ட்டிஃபைய்டு ஜாக்கெட்ஸ் Vs CE சர்ட்டிபைய்டு ஆர்மர்

Published: 07 April, 2023 | By RE Crew Team

CE சர்ட்டிஃபைய்டு ஜாக்கெட்ஸ் Vs CE சர்ட்டிபைய்டு ஆர்மர்

ஏற்றுகிறது...

உங்கள் சவாரி ஜாக்கெட் போதுமான பாதுகாப்பை அளிக்கிறதா ?

நீங்கள் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைக் காண அதைத் துரத்திச் செல்லும்போதோ அல்லது மலைகளில் வழுக்கும் சரிவுகளில் சவாரி செய்யும்போதோ, அந்தச் சாலைகள் உங்களை எங்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் கியர் உங்களைப் பாதுகாக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்

இல்லையா?

அவற்றின் பாதுகாப்புத் தன்மைகளுக்காக விற்கப்படும் ரைடிங் கியர்களில் பெரும்பாலானவை முழு ஆடைக்கும் CE-இன் சான்றிதழ் பெறுவதற்குப் பதிலாக, கவசங்களுக்கு மட்டுமே CE சான்றிதழ் பெற்றிருந்தன அது மட்டுமல்ல, CE சான்றளிக்கப்பட்ட கவசங்களும் CE சான்றளிக்கப்பட்ட ஜாக்கெட்டுகளும் ஒன்றுதான் என்ற தவறான கருத்து உள்ளது அது சம்பந்தமான உங்கள் சந்தேகங்களைத் நாங்கள் தீர்த்து வைப்போம்

22018 ஏப்ரல் முதல், ஐரோப்பாவில் உள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் கியர்களும், அதாவது ரைடிங் ஜாக்கெட்டுகள், ரைடிங் கால்சட்டைகள், கையுறைகள், ரைடிங் பூட்ஸ் போன்றவை PPE ஒழுங்குமுறைகளின்படி சோதிக்கப்பட வேண்டும் இதன் பொருள் என்னவென்றால், முழு ஆடையும் (ஆர்மர்கள்மட்டும்அல்ல) CE-இன் கீழ் சான்றளிக்கப்பட, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட அமைப்பால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

எனவே, பாதுகாப்புக்கான இந்த CE தரநிலை என்றால் என்ன

ஒரு CE லேபிள் அல்லது ஒரு தயாரிப்பின் மீது குறிப்பது என்பது விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான தொடர்புடைய அல்லது பொருந்தக் கூடிய ஆரோக்கியம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்கியிருப்பதற்கான அறிவிப்பாகும்

Wபாதுகாப்பு மோட்டார் சைக்கிள் கியரை வாங்கும்போது, நீங்கள் பரிசீலிக்கும் ஆடை குறைந்தபட்ச CE தரநிலையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வது அவசியம் பெரும்பாலும் கவசத்துக்கான சான்றிதழ் ரைடிங் ஆடைக்கான சான்றிதழுடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது உதாரணமாக, ரைடிங் ஜாக்கெட்டை எடுத்துக் கொள்வோம் CE சான்றளிக்கப்பட்ட ரைடிங் ஜாக்கெட்டுக்கும் CE சான்றளிக்கப்பட்ட கவசங்கள் கொண்ட ஜாக்கெட்டுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது ரைடிங் ஜாக்கெட்டுகளில் CE சான்றளிக்கப்பட்ட கவசங்கள் தாக்கப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, அதேசமயம் CE சான்றளிக்கப்பட்ட ரைடிங் ஜாக்கெட் தாக்கம் மட்டுமல்ல, துணியால் வழங்கப்படும் உராய்வு எதிர்ப்பு, தாக்கப் பகுதிகளில் பாதுகாப்பு, தையல் கிழிதல் மற்றும் வலிமை, ஆடையின் பணிச்சூழலியல் மற்றும் பரிமாண நிலைத்தன்மை ஆகியவற்றுக்காகவும் சோதிக்கப்படுகிறது CCE சான்றிதழைப் பெறுவதற்கு ரைடிங் ஜாக்கெட் உட்பட வேண்டிய சோதனைகளில் கவசங்கள் ஒரு பகுதி மட்டுமே

 

பாதுகாப்புக் கவசங்கள் எவ்வாறு பாதுகாப்புக்காக சான்றளிக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிந்து கொள்வோம் அவற்றில் இரண்டு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது

  •  
  • நிலை 2 பாதுகாப்பான்கள்:: தினசரி பயன்பாட்டைப் பொருத்தவரை, தாக்கத்தை உட்கிரகிக்க இவை போதுமானவை சாதாரண சவாரிக்குப் பொருத்தமானது, இவற்றில் அதிகபட்சமாக கடத்தப்படும் விசை 18 கிலோ நியூட்டனுக்கு குறைவாக இருக்க வேண்டும், மேலும் எந்தவொரு தனி மதிப்பும் 24 kN-ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது
  • நிலை 2 பாதுகாப்பான்கள்:: அதிக தாக்கம் ஏற்படுத்தும் விபத்துக்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களில் இது பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது அதிகபட்ச பரிமாற்ற விசை 9 kN க்கும் குறைவாக இருக்க வேண்டும், மேலும் எந்தவொரு தனி மதிப்பும் 12 kN-ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது

சவாரி செய்பவர் எந்த வகையான சவாரிக்குச் செல்கிறார் என்பதைப் பொருத்து, அவருக்குத் தேவையான பாதுகாப்பின் அளவை அவரால் தீர்மானிக்க முடியும் ரைடிங் ஜாக்கெட்டில் உள்ள கவசத்தை மாற்றுவதன் மூலம் ஒருவர் தன்னுடைய பாதுகாப்புத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் ஆர்மரின் நிலைமட்டுமல்ல, ஆர்மர்கள் அமைக்கப்படும் இடமும் பாதுகாப்பில் முக்கியபங்கு வகிக்கின்றன.

ஒவ்வொரு ரைடிங் ஜாக்கெட்டையும் அபாய அளவின் அடிப்படையில் 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்



அதே சமயம், ரைடிங் ஜாக்கெட்டில், முழு ஆடையும் (ஆர்மர் மட்டும் அல்ல) மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக CE சோதனைக்கு உட்படுகிறது. துணி முதல் தையல் வரை இன்னும் பல என்று அனைத்தும் CE தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன

சோதனையின் அடிப்படையில், CE சான்றளிக்கப்பட்ட ரைடிங் ஜாக்கெட் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

CE சான்றளிக்கப்பட்ட ஒவ்வொரு கியரும் அதன் சான்றளிக்கப்பட்ட வகை மற்றும் அது சோதிக்கப்பட்ட தரத்தை விளக்கும் ஒரு சிறு புத்தகத்துடன் வருகிறது பொறுப்பான சவாரி செய்பவர் என்ற முறையில், நீங்கள் கியர் வாங்கும்போது இந்தப் புத்தகத்தையும் கேட்டு வாங்க வேண்டும்

Royal Enfield-இல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “ஒரு முழுமையான மோட்டார் சைக்கிள் அனுபவத்தை” வழங்குவதை நாங்கள் ஒரு நீண்டகால உறுதிப்பாடாகக் கொண்டுள்ளோம் எங்கள் கியரை வடிவமைக்கும்போது வசதி, ஸ்டைல், பாதுகாப்பு ஆகிய 3 பண்புகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் அதிகபட்ச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, PPE ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு கிளாஸ் A பாதுகாப்புடன், CE சான்றளிக்கப்பட்ட பல வகையான புதிய ரைடிங் ஜாக்கெட்டுகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் இந்த ரைடிங் ஜாக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.4950 மட்டுமே இவற்றில், 5 முற்றிலும் CE-சான்றளிக்கப்பட்டவை (ரூ. 8950 தொடக்கம் ) இவை தாக்கப் பாதுகாப்பு ஆர்மர்களில் சந்தையில் முன்னணியில் உள்ள D3O மற்றும் KNOX-இன் CE சான்றளிக்கப்பட்ட ஆர்மர்களைப் பயன்படுத்துகின்றன

மிக உயர்ந்த தரமுள்ள, அனைத்து நிலப்பரப்புக்கான ரைடிங் ஜாக்கெட்டுகளின் தொடக்க விலை ரூ. 12,950 மட்டுமே, D3O ஆர்மர்களுடன் மிகச் சிறந்த அதிர்ச்சி உள்கிரகிப்பை உறுதி செய்கிறது Khardung La V2 முழங்கை மற்றும் தோள்களில் D3O நிலை 2 ஆர்மர்களைக் கொண்டுள்ளது, அதே சமயம் Nirvik நிலை 2க்கு கூடுதலாக தோள் மற்றும் முழங்கையில் ஆர்மர்களைக் கொண்டுள்ளது, மேலும் மார்பில் நிலை 2 ஆர்மர் மற்றும் பின்புறத்தில் நிலை 1 ஆர்மர்கள் உள்ளன. இந்த CE சான்றளிக்கப்பட்ட ரைடிங் ஜாக்கெட்டுகள் இலேசானதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும், அதே சமயத்தில் நீங்கள் சிறந்த பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மறுபுறம், Knox ஆர்மர், நீண்ட அல்லது குறுகிய சுற்றுப் பயணங்களுக்கு மிகவும் பொருத்தமான ரைடிங் ஜாக்கெட்டுகளின் ஒரு பகுதியாக வருகிறது. ஃப்ளெக்சிஃபார்ம் அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Micro-lock போன்ற புதுமையான ஆர்மர் வகைகளுடன், Knox ஆர்மர்கள் சிக்கனமான விலையில் உங்கள் ஜாக்கெட்டை இலேசானதாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்கும் அதே சமயம் CE சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பை உங்களுக்கு வழங்குகின்றன.

சுற்றுலாவுக்கான ரைடிங் ஜாக்கெட்டுகள் ரூ. 8950 விலையில் தொடங்குகின்றன, மற்றும் அனைத்துமே கிளாஸ் A-இன் கீழ் CE சான்றிதழ் பெற்றவை, நகர ரைடிங் ஜாக்கெட்டுகளின் விலை ரூ. 4950 மட்டுமே (The Streetwind ஜாக்கெட் மற்றும் The windfarer ஜாக்கெட்) அவற்றில் உயர்தர Knox CE நிலை 1 ஆர்மர்கள் பொருத்தப்பட்டுள்ளன The Explorer Jacket தோள் மற்றும் முழங்கையில் Knox Micro-Lock CE நிலை 2 புரொடெக்டர்களைக் கொண்டுள்ளது இது 3 அடுக்குள்ள அனைத்து சீசனுக்குமான ரைடிங் ஜாக்கெட் ஆகும், இது ஒரு மழை அடுக்குடன் பிரிக்கக் கூடிய வெப்ப உள் உறையைக் கொண்டுள்ளது, இதைத் தனித்தனியாகவும் அணியலாம் இந்த Knox ஆர்மர்கள் தாக்கத்தின்போது அதிகபட்ச ஆற்றலை உட்கிரகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் வசதி, ஸ்டைல் ஆகியவற்றுடன் பாதுகாப்பையும் சேர்த்து விரும்புவோருக்கு இது மிகச் சரியானது ஆகும்

 

சவாரி செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் மோட்டார் சைக்கிள் அனுபவத்தை மேம்படுத்துவதே எங்கள் பெருமுயற்சி ஆகும் பல சவாரி தேவைகளைப் பூர்த்தி செய்யும், மலிவு விலையில், எளிதாகக் கிடைக்கக் கூடிய பல்வேறு வகையான ரைடிங் கியர்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்
எனவே, அடுத்த முறை அந்த சிரமமான சரிவுகளில் சவாரி செய்யவோ அல்லது நீங்கள் ஏற்கனவே அறிந்திராத கடற்கரையோரம் பயணிக்கவோ நீங்கள் திட்டமிட்டால், ரைடிங் ஜாக்கெட்டுடன் வழங்கப்பட்ட லேபிள்கள், குறியிடல்கள், அறிவுறுத்தல் கொண்ட கையேட்டை கவனமாகப் படிக்கவும் உங்கள் சவாரிக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், ரைடிங் ஜாக்கெட்டில் CE சான்றளிக்கப்பட்ட ஆர்மர் மற்றும் CE சான்றளிக்கப்பட்ட ரைடிங் ஜாக்கெட் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசத்தை கவனத்தில் கொள்ளவும்

சவாரி செய்து கொண்டே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக சவாரி செய்யுங்கள்

← Previous Post


அபவுட் எ இயர் அபார்ட் எ டேல் ஆஃப் டூ கிராஷஸ்: தி இம்பார்டன்ஸ் ஆஃப் ரைடிங் கியர்

Next Post →


A tale of the coastal trail