Royalenfield Store Page loader Gif
அக்ராஸ் வேரியிங் டெர்ரெய்ன்ஸ்

அக்ராஸ் வேரியிங் டெர்ரெய்ன்ஸ்

Published: 07 April, 2023 | By Arif Arif

அக்ராஸ் வேரியிங் டெர்ரெய்ன்ஸ்

ஏற்றுகிறது...

பல மாத பொதுமுடக்கத்திற்குப் பிறகு, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்காகக் காத்திருந்த பிறகு, மலைக்கு செல்லும் ஆர்வம் என்னை துரத்தி அதிகம் பாதித்து விட்டது அதனால் சாலைகளில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில், குவஹாத்தியில் இருந்து டெல்லி வழியாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிஸ்பா வரை சுமார் 3,500 கிலோமீட்டர் தூரம் தனியாக சவாரி செய்ய முடிவு செய்தேன்

யோசித்துப் பார்க்கும்போது, நிலப்பகுதியின் அடிப்படையில் சவாரியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் . குவாஹாத்தியிலிருந்து டெல்லி வரை சமவெளியைப் பற்றியது, ஆனால் அதே பாதையில் செல்ல விரும்பும் ஒருவருக்கு கற்றல் வளைவு, நிலப்பகுதிகளைப் போல சமதளமாக இருக்காது டெல்லிக்கு செல்ல மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் வழியாக சவாரி செய்ய வேண்டும் நீங்கள் பீகாரை அடையும் வரை விஷயங்கள் சுவாரசியமாக இருக்காது.

நான், Royal Enfield Himalayan உடன் இணைந்து குவாஹாத்தி-டெல்லி இடைப்பட்ட தூரத்தில் எங்கும் நிறுத்தக் கூடாது, (நிச்சயமாக, பல நிறுத்தங்கள் இருந்தன) என்று முடிவு செய்தேன், ஆனால் இருட்டிய பிறகு பீகாரில் தங்க வேண்டியதாயிற்று தயவுசெய்து இரவில் அந்த மாநிலம் வழியாக சவாரி செய்வதைத் தவிர்க்கவும். சிதிலமடைந்த சாலைகள், சரியாகச் சொல்வதென்றால் நெடுஞ்சாலைகள் தெருவிளக்குகள் இல்லாமல் மோசமாக இருந்தன வழக்கமாக Himalayan போதிய வெளிச்சத்தைக் கொடுத்தது, ஆனால் அது சவாலாகத்தான் இருந்தது. இது பாதுகாப்பு அரணாகத் தோன்றியதால், எனது ரைடிங் கியர்களுடன் நான் இணைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன், நான் தூரங்களைக் கடந்து கொண்டிருந்தபோது என் மனதில் ஓடிய கட்டுப்பாடற்ற சிந்தனைகள் அனைத்திலிருந்தும் அது என்னைத் துண்டித்தது நான் ஒரு Royal Enfield Nirvik ஜாக்கெட் மற்றும் ஒரு Royal Enfield Tso Kar ரைடிங் பேண்ட் மற்றும் ஒரு ஜோடி Royal Enfield Stout கிளவுஸ்களை. அணிந்திருந்தேன் அனைத்து முக்கியப் பிராண்டுகளின் சவாரி கியர்களும் என்னிடம் உள்ளன, ஆனால் இந்த கியர்களின் கட்டமைக்கப்பட்ட தரம் என்னிடம் உள்ள மற்ற கியர்களை விட மிகவும் சிறப்பாக இருந்தது நீங்கள் சவாரி செய்யும் போது நல்ல ரைடிங் கியர்களை வைத்திருப்பது முக்கியம், உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு டயர் போல அது உங்களுக்கு முக்கியமாகும்-- அது வெளி உலகத்துடனான தொடர்புப் புள்ளியாகும்.

அதிகாலை 3:00 மணியளவில், கோரக்பூரிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில், சாலையோரத்தில் ஒரு இடிந்து விழும் நிலையில் இருந்த ஒரு உணவகத்தில் நிறுத்தி, நான் சுவையான 'ஆலு பராத்தாவை' மென்று கொண்டே எனக்கோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ ஏதேனும் பிரச்சனை இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன் அங்கு நிறுத்திய பிறகு உடனேயே, நான் எரிபொருள் டேங்கை நிரப்பிக் கொண்டேன், அயோத்தி வழியாக டெல்லிக்கு நீண்ட தூரம் செல்லத் தயாராக இருந்தேன் அங்கிருந்து டெல்லி வரை விழித்துக் கொண்டிருப்பதில் மட்டும்தான் என் கவனம் இருந்தது எனக்குத் தூக்கம் வரவில்லை, ஆனால் சில நேரங்களில், சுவாரசியமில்லாத நீண்ட பயணங்களில் நீங்கள் சோம்பலாக உணர்வீர்கள்

கடந்த 24 மணி நேரமாக நான் சவாரி செய்த தெருக்களைப் பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் எனக்கு அமுதம் போல இருந்தன ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை வழியாக டெல்லியை நோக்கிய பயணத்தின் பெரும்பகுதி நீண்ட அழகிய சாலையாகும் அநேகமாக, இந்தியாவில் மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டிய இரண்டு சாலைகள் இவைதான், ஆனால் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் சவாரிக்கு மதிப்புள்ளது

நான் டெல்லியை அடைந்தபோது, நான் முற்றிலும் சோர்வாக இருந்தேன் நான் என் பயணத் திட்டத்தை மாற்றி, தலைநகரில் தங்கியிருக்கும் நேரத்தை ஒரு நாள் கூடுதலாக நீட்டித்தேன் முடிவு செய்தபடி, தர்ச்சாவுக்குச் செல்ல வேண்டும், என்பது என் திட்டம் ஆனால் சமூக ஊடகங்கள் அனைத்திலும் ஹிமாச்சல் முழுவதும் நிலச்சரிவு சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டது சரி, சவாலை ஏற்றுக் கொள்கிறேன். அதை இன்னும் வேடிக்கையாக ஆக்குவோம்!

நான் Himalayan-க்கு பதிலாக Meteor 350-ஐ மாற்றிக் கொண்டேன், மேலும் இந்த நகர்ப்புற மோட்டார் சைக்கிள் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படும் என்பதைப் புரிந்து கொள்ளத் தயாராக இருந்தேன் என் கியர்கள் மாறாமல் அப்படியே இருந்தன. ஆனால் வானிலை முன்னறிவிப்பு காட்டியபடி, சவாரியின் பெரும்பகுதியில் மேகமூட்டமான சூழ்நிலை இருந்தது இரண்டாவது கட்டத்திற்கு எல்லாம் தயாராகி விட்டது!

சண்டிகர் செல்லும் வழி, அது ஒரு கதகதப்பான நாள்! என் ஜாக்கெட்டில் உள்ள காற்றோட்டம் அதிசயங்களைச் செய்தது. முன் மற்றும் பின்பகுதியில் உள்ள துவாரங்கள் எனக்கு வியர்க்காமல் செய்தன, ஆனால் கைகளில் துவாரங்கள் இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது இருப்பினும், கொளுத்தும் வெயிலிலும் குளிர்ச்சியடைய இது எனக்கு உதவியது சண்டிகரில் இருந்து, விஷயங்கள் வேறு விதமாக இருந்தன. மழை கொட்டத் தொடங்கியது. வானிலை முன்னறிவிப்பும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை

ஜாக்கெட்டுடன் வரும் மழை கவர் என்னை காப்பாற்றியது, ஆனால் எனக்கு ஏமாற்றம், அந்த நேரத்தில் நான் ஒரு ஷூ கவரை எடுத்துச் செல்லவில்லை எனது கிளவுஸ்களோ அல்லது எனது ஷூவோ நீர் உட்புகாதவை அல்ல. தண்ணீர் உள்ளே புகுந்து விட்டது, நான் மணாலியை நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது வெப்பநிலை குறையத் தொடங்கியது, மழையில் நனைந்த எனது ஷூக்கள் மற்றும் கையுறைகளால் எனக்கு உடல்ரீதியாக சவால் ஏற்பட்டது ஜிஸ்பா வரை, மழை பெய்து கொண்டிருந்ததால் ஓய்வே இல்லை, என்னால் முடிந்த வரை நான் விரைவாகச் சென்று கொண்டிருந்தேன்

ஒரு ஜோடி சூடு செய்யப்பட்ட <கிளவுஸ்கள்>, நீர்ப்புகாத சவாரி பூட்ஸ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்பதில் நான் மோசமாகத் தவறிவிட்டேன் என் சவாரியின்போது பேண்ட்டுக்கான ஒரு மழை கவருடன், இந்த இரண்டும் இருந்திருந்தால்,, மழையின்போது கூட விஷயங்கள் இன்னும்ந் நன்றாக இருந்திருக்கும் ஒரு வேளை அடுத்த சவாரிக்கு, நான் இதை ஏற்பாடு செய்து கொள்வேன்..

கனத்த இதயத்துடனும், எல்லா சவால்களையும் மீறி மகழ்ச்சி அளிக்கும் நினைவுகளுடனும் இரண்டு நாட்களில் மீண்டும் டெல்லிக்கு வந்தேன் உங்கள் எல்லா சவாரி கியர்களையும் அணியுங்கள். முடிந்தால், குறிப்பிட்ட சவாரிகளுக்கு நீங்கள் அணியத்தகுந்த சரியான கியர்களைத் தேர்ந்தெடுக்கவும். குவஹாத்தியில் இருந்து டெல்லி வரை வசதியாக இருந்த அதே கியர்களின் தொகுப்பு, நிலப்பகுதிகள் மாறும்போது வித்தியாசமான சவால்களைத் தந்தன. அடுத்தமுறை சந்திக்கும்வரை, பாதுகாப்பாக சவாரி செய்யுங்கள்

← Previous Post


உத்தராகண்ட் - ஆன் அட்வென்ச்சர்

Next Post →


அபவுட் எ இயர் அபார்ட் எ டேல் ஆஃப் டூ கிராஷஸ்: தி இம்பார்டன்ஸ் ஆஃப் ரைடிங் கியர்